2010 ஆண்டுக்கான காலண்டர்கள் தரவிறக்க, அச்செடுக்க
2009ம் ஆண்டின் இறுதி மாதங்களில் இருந்து கொண்டு இருக்கிறோம். புத்தாண்டு துவங்கியது காலண்டர், டைரி என்று அமர்க்களப்படும். இணையத்தில் 2010 ஆண்டிற்கான காலண்டர்கள் PDF மற்றும் DOC கோப்பு வடிவில் கிடைக்கின்றன. அவற்றை நீங்கள் தரவிறக்கி அச்செடுத்து கொள்ள முடியும்.
இந்த காலண்டர்கள் எல்லாம் ஆங்கிலத்தில்தான் உள்ளன.தமிழக விடுமுறை நாட்களுடன் கூடிய தமிழ் காலண்டர்களை தேடி வருகிறேன். கிடைத்தால் அதற்கான சுட்டி பின்பு தருகிறேன். இதோ ஆங்கில காலண்டர்களுக்கான சுட்டிகள்
இந்த தளத்தில் http://www.calendarlabs.com/online-calendar.php அனைத்து நாடுகளின் விடுமுறைகளுடன் கூடிய காலண்டர்களை தேர்ந்தெடுத்து தரவிறக்கி கொள்ளலாம். மேலும் பல வகையான காலண்டர் வழங்கும் தளங்கள் கீழே.
Calendars at Vertex42 , Printable 2010 Calendar, Stylish Colorful Calendars, Simple Printable Calendars, Calendars at About.com , 123newYear
Tuesday, December 15, 2009
GOOGLE OPERATING SYSTEM
கூகிள் குரோம் இயங்குதளம் விரிவான பார்வை
இணையத்தின் பெரும் சக்தியான கூகிள் தனது புதிய இயங்குதளமான கூகிள் குரோம் ஓஎஸ்சை திறந்த வெளி (Open Source) மென்பொருளாக 19 நவம்பர் 2009 அன்று அறிமுகப்படுத்தி உள்ளது. கூகிள் புதிய இயங்குதள தயாரிப்பில் ஈடுபட்டு இருப்பதாக அதற்கு கூகிள் குரோம் ஓஎஸ் என்று பெயரிட்டு கடந்த ஜூலை மாதம் அறிவிப்பு வெளியிட்டு இருந்தது. நேற்று அதற்கான திறந்தவெளி நிரலை வெளியிட்டு உள்ளது.
கூகிள் குரோம் ஓஎஸ் என்பது என்ன? அது என்னவெல்லாம் சேவை வழங்க போகிறது என்பதை சற்றே விளக்கமாக பார்ப்போம்.
கணினியை பொறுத்தவரை சராசரி பயனர் என்ன பயன்பாடுகளுக்கு உபயோகிக்கிறார்? நம்மையே எடுத்து கொள்ளுவோம். கணினியை துவக்கிய பின் நேரடியாக இணைய உலாவியை திறந்து கொள்ளுகிறோம். ஈமெயில், யூடியுப், நண்பர்களுடன் அரட்டை, தளங்களை வாசித்தல் என்று பெரும்பாலும் நமது நேரத்தை இணையத்தில் செலவு செய்கிறோம். முடிந்தவுடன் இணைய உலாவியை மூடி விட்டு கணினியை சட்டவுன் செய்து விடுகிறோம். நமது பெரும்பாலான நேரம் இணைய உலாவியில் தான் செலவாகிறது. கணினியில் உள்ள மற்ற ப்ரோக்ராம்களை மென்பொருள்களை உபயோகிப்பது என்பது மிக குறைவே.
இந்த விஷயத்தை தான் கூகிள் தனது குரோம் ஓஎஸ் இயங்குதளத்திற்கு மூல மந்திரமாக எடுத்து உள்ளது. பெரும்பாலும் மற்ற மென்பொருள்களை உபயோகிக்காத போது அவற்றை கணினியில் ஏன் அடைத்து வைக்க வேண்டும்? வைரஸ் பாதுகாப்பு என்று ஏன் பயனரை சிக்கலுக்கு உள்ளாக்க வேண்டும்?
கூகிள் குரோம் ஓஎஸ்சை பொறுத்தவரை நீங்கள் உங்கள் கணினியில் எதையுமே நிறுவ தேவை இல்லை. அனைத்துமே இணைய அப்ளிகேஷன்கள்தான். அவை மென்பொருள் நிறுவனங்களில் செர்வரில் பாதுகாப்பாக இருக்கும். கூகிள் குரோம் ஓஎஸ் கணினியை திறந்தவுடன் அது இணையத்திற்கு சென்று விடும்.
உதாரணத்திற்கு நீங்கள் ஒரு ஆவணத்தை உருவாக்க, எடிட் செய்ய வேண்டும். சாதரணமாக நீங்கள் மைக்ரோசாப்ட் வோர்ட் உபயோகித்து வந்து இருப்பீர்கள். கூகிள் குரோம் ஓஎஸ்சை பொறுத்தவரை இணையத்தில் அதற்கான ஒரு அப்ளிகேஷன் வழங்கப்படும் அதனை நீங்கள் உபயோகித்து கொள்ளலாம். உதாரணத்திற்கு கூகிள் டாக்ஸ். http://docs.google.com/ . மற்றும் விண்டோஸ்சில் .EXE கோப்பு போன்று இங்கு எதனையும் இயக்க முடியாது. அதற்கான தேவையும் இங்கு இல்லை.
கூகிள் குரோம் ஓஎஸ் பற்றி இந்த வீடியோ பாருங்கள்
இது போன்று உங்கள் பெரும்பாலான தேவைகளுக்கு (படங்கள் உருவாக்குதல், வீடியோ உருவாக்குதல் உள்ளிட்ட) இணையத்தில் உள்ள அப்ளிகேஷன்கள் வழங்கப்படும். எதையும் நீங்கள் கணினியில் நிறுவி வைத்து கொள்ள தேவை இல்லை. உபயோகித்த பின்பு நீங்கள் உருவாக்கும் கோப்புகளை நீங்கள் இணையத்திலே சேமித்து வைக்கலாம். அல்லது உங்கள் USB, மெமரி கார்டு போன்றவற்றில் சேமித்து கொள்ளலாம். சுருங்க சொல்ல வேண்டும் எனில், உங்கள் கோப்புகளை கூகிள் , மென்பொருள் நிறுவனங்களே இணையத்தில் பாதுகாக்க போகிறது. நீங்கள் உலகின் எங்கிருந்து வேண்டுமானாலும் அவற்றை அணுகி கொள்ளலாம்.
இதன் சாதகங்கள் என்ன என்று கூகிள் சொல்வதை பார்ப்போம்.
1. கூகிள் குரோம் ஓஎஸ்சின் தாரக மந்திரம் வேகம், எளிமை மற்றும் பாதுகாப்பு (Speed, Simplicity, and Security) .
வேகம் : கூகிள் குரோம் ஓஎஸ் அதி வேகத்தில் திறக்கும் என்கிறார்கள். தற்போது ஏழு வினாடிகளில் பூட் ஆகிறது. கூகிள் குரோம் பூட்டிங் குறித்த இந்த வீடியோவை பாருங்கள்
எளிமை : கூகிள் குரோம் திறந்தவுடன் இணைய உலாவிதான் எல்லாம். அதிலேயே அனைத்தும் இருக்கும். இணைய உலாவியை உபயோகிக்க தெரிந்து அனைவரும் எளிமையாக கூகிள் குரோம் உபயோகிக்கலாம். கூகிள் குரோம் ஓஎஸ் பயன்பாடு குறித்த இந்த வீடியோவை பாருங்கள்.
பாதுகாப்பு : அனைத்து அப்ளிகேஷன்களும் இணைய மென்பொருள்கள் என்பதால், எந்த மென்பொருளும் உங்கள் கணினியில் நிறுவுவதற்கு வாய்ப்பு அளிக்கப்பட வில்லை. இதனால் வைரஸ், அட்வேர் போன்ற தாக்குதலுக்கு வாய்ப்பில்லை. கூகிள் குரோம் ஓஎஸ் பாதுகாப்பு குறித்த இந்த வீடியோ பாருங்கள்.
2. கூகிள் குரோம் ஓஎஸ், தோற்றத்தில் குரோம் இணைய உலாவியை போன்றே இருக்கும். இடது புறத்தில் இணைய அப்ளிகேசன்களுக்கு என்று தனியே ஒரு டேப்(Tab) இருக்கும். ஒவ்வொரு இணையதளத்தையும் நீங்கள் தனித்தனி டேப்களில் திறந்து பார்ப்பது போன்று கூகிள் அப்ளிகேஷன்களை தனித்தனி டேப்களில் திறந்து வேலை செய்து கொள்ளலாம்.
3. கேமராவில் / மொபைலில் வைத்துள்ள புகைப்படங்கள், கோப்புகள் போன்றவதை அணுக நீங்கள் அவற்றை கணினியுடன் இணைத்து இணையத்தில் நேரடியாக ஏற்றி வேலைகளை செய்து கொள்ள முடியும்.
கேட்க நன்றாகத்தான் இருக்கிறது. கூகிள் குரோம் ஓஎஸ்சை எப்படி வாங்குவது, கணினியில் எப்படி நிறுவுவது?
கூகிள் குரோம் ஓஎஸ்சை தனியே DVD யில் வாங்கி கணினியில் நிறுவுவது என்ற வேலை இல்லை. நேரடியாக கூகிள் குரோம் ஓஎஸ் கணினிகலாகவே வாங்க வேண்டியதுதான். உதாரணத்திற்கு நாம் மொபைல் வாங்கும் பொழுது அந்த நிறுவனத்தின் இயங்குதளத்துடன் அனைத்தும் நிறுவியே வருமே அது போல. கூகிள் குரோம் கணினிகள் என்று தனியே விற்பனைக்கு வரும். இதற்கான முயற்சிகளை இன்டெல், அசுஸ், HP போன்ற நிறுவனங்களுடன் கூகிள் எடுத்து வருகிறது. விண்டோஸ் போல நீங்கள் கூகிள் குரோம் ஓஎஸ்சை அனைத்து கணினிகளிலும் நிறுவி கொள்ள முடியாது.
கூகிள் குரோம் ஓஎஸ் செயல்பாடு குறித்த இந்த டெமோ வீடியோ பாருங்கள் . அறிமுக விழாவில் கூகிள் குரோம் ஓஎஸ் இயக்கிய போது எடுக்கப்பட்ட வீடியோ .
கூகிள் குரோம் ஓஎஸ் எப்பாது வர போகிறது. இன்னும் ஒரு வருடத்தில் பயனர்களுக்கு கிடைக்கும் என்று காலம் நிர்ணயித்து உள்ளார்கள். இது ஆரம்பத்தில் டெஸ்க்டாப் கணினிகள், லேப்டாப் கணினிகளுக்கு வர போவது இல்லை. நெட்புக் கணினிகளுடன் மட்டும் ஆரம்பத்தில் வரும். நாளடைவில் அனைத்து விதமான கணினிகளுக்கும் விரிவு படுத்தப்படும்.
நெட்புக் கணினிகள் என்பது சிறிய அளவிலாக லேப்டாப்கள் ஆகும். எட்டு முதல் 11 இன்ச் திரைகளுடன் எங்கும் எளிதில் கொண்டு சென்று உபயோகிக்கும் படி சிறிய அளவில் வருகின்றன. இவை மிகவும் அதிகமாக பரவி வருவதால், இதன் தேவை அதிகரித்து இருப்பதால் கூகிள் இங்கிருந்து ஆரம்பிக்கிறது.
ஓகே. இது என்ன விலை இருக்கும். மிக குறைந்த அளவில் வரலாம். கூகிள் கூறுவதை பார்த்தால் இந்த கணினியில் ஹார்டுடிஸ்க்கே தேவைப்படாது. நமது இந்திய ரூபாயில் பதினைந்தாயிரம் விலையில் ஆரம்பிக்கலாம். தொலைகாட்சி பெட்டிகள் போன்று கூகிள் குரோம் ஓஎஸ் பெட்டிகள் இல்லங்களில் ஆக்ரமிக்கலாம்.
இதனுடைய நீட்சி எந்த அளவில் இருக்கும்? மென்பொருள் நிறுவனங்கள், மென்பொருள்களை விற்பதுடன் மென்பொருள்களை இணையத்தில் வாடகைக்கு விடும் சேவையை வழங்கலாம். உதாரணத்திற்கு ஒரு புகைப்படத்தில் வேலை செய்ய உங்களுக்கு போட்டோஷாப் மென்பொருள் தேவை படுகிறது. அதன் விலை பல லட்சம் ரூபாய்கள். அதை எந்நேரமும் உபயோகிக்க போவதில்லை. சில மணி நேரங்கள் மட்டுமே தேவை படுகிறது. இது போன்ற சூழல்களில் நீங்கள் அந்த மென்பொருளை இணையத்தில் சில மணி நேரங்கள் உபயோகித்து கொள்ள முடியும். அதற்கு சிறிய அளவு வாடகை மட்டும் வசூலிப்பார்கள். இந்த கட்டணம் கூட உங்கள் தொலைபேசி, இணைய பில்களில் வரும் அளவு அதன் மூலம் செலுத்தும்படி இதன் பயன்பாடுகள் நீளலாம்.
இந்தியாவில் இது எந்த அளவுக்கு எடுபடும்? இந்தியாவில் இணைய இணைப்பு என்பது இன்னும் தடுமாற்றத்தில்தான் உள்ளது. மொபைல் போன்களை செல்லும் இடமெல்லாம் உபயோகித்து கொள்வது போல செல்லுமிடமெல்லாம் இணைய இணைப்பு பெற இன்னும் ஐந்து வருடங்கள் ஆகலாம். அது போன்ற நேரத்தில்தான் கூகிள் குரோம் ஓஎஸ்சின் பயன்பாடு முழுமையாக கிடைக்கும்.
இணைய இணைப்பு இல்லை என்றால் கூகிள் குரோம் ஓஎஸ் எதற்கும் பயன்படாது. தொடர்ந்து கூகிள் குரோம் ஓஎஸ் பற்றி எழுதுகிறேன். உங்கள் பின்னூட்டங்களை எதிர்பார்க்கிறேன்.

LINUX USB BOOTING
லினக்ஸ் பதிப்புகளை USB மூலம் சோதிக்க/நிறுவ
Posted: 06 Dec 2009 08:13 AM PST
லினக்ஸ் திறந்த மூல இயங்குதள மென்பொருள் என்பதால் பல வடிவங்களில் இணையத்தில் தரவிறக்க கிடைக்கின்றன. அவற்றில் Ubuntu, Suse, Debian, Slackware, Fedora, Mandriva, Knoppix, Gentoo, Mepis, Xandros, Linux Mint உள்ளிட்டவை பிரபலமாக இருக்கின்றன.
இவை பெரும்பாலும் இணையத்தில் ISO கோப்புகளாக தரவிறக்கத்திற்கு கிடைக்கின்றன. இவற்றை நீங்கள் தரவிறக்கி CD அல்லது DVD யில் எழுதி கணினியில் நிறுவுவதற்கோ , சோதித்து பார்ப்பதற்கோ உபயோகப்படுத்த வேண்டி இருக்கும். இதனால் பல CD/DVD கள் வீணாவது தவிர்க்க இயலாதது. இவ்வாறு அல்லாமல் எப்படி USB யில் லினக்ஸ் பதிப்புகளை நிறுவி Live USB யாக பயன்படுத்துவது எப்படி என்று பார்ப்போம்.
இதற்கு UnetBootin எனும் இலவச மென்பொருள் பயன்படுகிறது. இதன் மூலம் நீங்கள் தரவிறக்கும் லினக்ஸ் ISO கோப்புகளை USB யில் எழுதி அதன் மூலம் பூட் செய்து லினக்ஸ்சை உங்கள் கணினியில் சோதித்து பார்த்து கொள்ளலாம்.
இதனை தரவிறக்க இந்த சுட்டிக்கு செல்லுங்கள். தரவிறக்கி திறந்து கொள்ளுங்கள். இதனை உபயோகிக்கும் போது இரண்டாவது தேர்வான "Disk Image" என்பதனை தேர்வு செய்து கொண்டு, நீங்கள் தரவிறக்கி வைத்துள்ள லினக்ஸ் பதிப்பு ISO கோப்பினை தேர்வு செய்து கொள்ளுங்கள். கீழே உங்கள் USB டிரைவ் எழுத்தினை தேர்வு செய்து கொண்டு OK கிளிக் செய்து USB யில் எழுதி கொள்ளுங்கள்.
அடுத்து உங்கள் கணினியை துவங்கும் போது கீபோர்ட்டில் F2 அல்லது Del பட்டன்களை அழுத்தி தோன்றும் CMOS திரையில் Boot From USB என்பதனை அமைத்து கொள்ளுங்கள். இனி உங்கள் கணினி USB மூலம் பூட் ஆகி லினக்ஸ் மூலம் இயங்கும்.

LINUX-
லினக்ஸ் மின்ட் - சிறந்த லினக்ஸ் இயங்குதள வடிவம்
Posted: 06 Dec 2009 12:57 PM PST
கணினி இயங்குதள உலகில் மைக்ரோசாப்ட்டின் விண்டோஸ் ஜாம்பாவனாக இருந்து வருகிறது. லினக்ஸ் பதிப்புகள் இலவசமாக வழங்கப்பட்டாலும் அவற்றை உபயோகிப்பதில் தயக்கம் நிலவுகிறது.
நானும் உபுண்டு, பெடோரா, பப்பி லினக்ஸ் என்று பெரும்பாலான லினக்ஸ் இயங்குதளங்களை முயற்சித்து பார்த்து இருக்கிறேன். இருந்தாலும் லினக்ஸ்க்கு முழுமையாக மாற முடியவில்லை. காரணமாக நான் கருதுவது இன்னும் லினக்ஸ் விண்டோஸ் அளவுக்கு எளிமையாக இல்லை. லினக்ஸ்சை ஒப்பிடுகையில் விண்டோஸ் பல விதங்களில் எளிமையான அனுபவத்தை தருகிறது.
விண்டோஸ் ஸையே பயன்படுத்தி பழக்கப்பட்ட நாம் லினக்ஸ் என்ற புதிய விஷயத்தை கற்றுக்கொள்ளுவது சில காலம் பிடிக்கும். ஆனால் முன்பை விட லினக்ஸ் வளர்ச்சி குறிப்பிடத்தக்க அளவில் இருந்து வருகிறது. விண்டோஸ் , லினக்ஸ் என்று Dual Boot மூலம் இரண்டு இயங்குதளங்களையும் பயன்படுத்திவரும் பலரை தற்போது காண முடிகிறது. இணையத்தின் வளர்ச்சியால் லினக்ஸ் இயங்குதளம் மக்களை எளிதில் சென்றடைய முடிந்திருக்கிறது. லினக்ஸ் தொடர்பான உதவி பக்கங்கள் இணையத்தில் பெருகி கிடக்கின்றன.
ஏன் தமிழில் கூட பல நண்பர்கள் லினக்ஸ் பற்றி பதிந்து வருகிறார்கள். விரைவில் வெளிவர போகும் கூகிள் குரோம் ஓஎஸ் கூட லினக்ஸ் அடிப்படையில் தான் உருவாக்க படுகிறது. விரைவில் லினக்ஸ் அடிப்படையிலான இயங்குதளங்கள் அதிக அளவில் பயன்படுத்த படலாம்.
சராசரி கணினி உபயோகிப்பாளருக்கு லினக்ஸ் என்றால் உபுண்டு என்ற பெயர்தான் நியாபகத்திற்கு வரும். அந்த அளவிற்கு உபுண்டு என்ற பெயரை மக்களிடம் கொண்டு சேர்த்து உள்ளனர். நானும் உபுண்டு உபயோகப்படுத்தி பார்த்து உள்ளேன். ஏனோ தெரியவில்லை உபுண்டு என் மனதை கவரவில்லை. நானே என்னை வலுகட்டாயமாக உபுண்டு பயன்படுத்த நிர்பந்த படுத்தி கொண்டாலும் அது ஒரு வித சலிப்பை தந்தது. ஒவ்வொரு புதிய பதிப்பு வரும் போதும் சில நாட்கள் உபயோகிப்பதோடு சரி. பிறகு மீண்டும் விண்டோஸ்க்கு மாறி விடுவேன். ஆனால் உபுண்டு கவர்ந்த இயங்குதளமாக பலரால் உபயோகப்படுத்த பட்டு வருகிறது.
ஏதச்சையாக லினக்ஸ் மின்ட் (Linux Mint) என்ற இயங்குதளத்தை இணையத்தில் காண நேரிட்டது. தரவிறக்கி உபயோகப்படுத்தி பார்த்தேன். இது உபுண்டுவை அடிப்படையாக கொண்டு வடிவமைக்கப்பட்ட இயங்குதளம். உபுண்டுவை விட உபயோகிக்க எளிமையாக உள்ளது. முதல் பயன்பாட்டிலேயே கவர்ந்து விட்டது உண்மை. இது பற்றி மேலும் அறிய மற்றும் ஸ்க்ரீன் ஷாட்கள் பார்க்க லினக்ஸ் மின்ட் இணையதளத்திற்கு செல்லவும்.
விண்டோஸ் உபயோகிப்பது உங்களுக்கு போரடிக்கிறதா? நீங்கள் லினக்ஸ் உபயோகிப்பதில் ஆர்வம் உள்ளவரா? உபுண்டு உபயோகிப்பாளரா? நன்கு வடிவமைக்க பட லினக்ஸ் பதிப்பு தேடுகிறீர்களா? கண்டிப்பாக நீங்கள் லினக்ஸ் மின்ட் உபயோகித்து பார்க்கலாம். இது உங்களை கண்டிப்பாக கவரும் என்று நம்புகிறேன்.
லினக்ஸ் மின்ட் ஹெலேனா (Linux Mint 8 Helena ) எனும் புதிய பதிப்பு வெளியாகி உள்ளது. இதனை தரவிறக்க இந்த சுட்டியை கிளிக் செய்யுங்கள். ISO கோப்பாக தரவிறக்கத்திற்கு கிடைக்கும். தரவிறக்கி CD யில் எழுதி கொண்டு நிறுவி கொள்ளுங்கள்.
CD/DVD யை நீங்கள் வீணாக்க வேண்டாம் என்று நினைத்தால் USB மூலம் லினக்ஸ் பதிப்புகளை சோதிப்பது எப்படி? என்ற இடுகை ஏற்கனவே எழுதி உள்ளேன். அதன் மூலம் நீங்கள் தரவிறக்கிய ISO கோப்பை USB யில் எழுதி கொண்டு சோதித்து பாருங்கள்.

Subscribe to:
Posts (Atom)