Google Apps-நிறுவனத் தேவைகளின் முற்றுப்புள்ளி
சிறுகுறு நிறுவனங்களிலிருந்து பெரிய நிறுவனங்கள் வரை தம்முடைய அன்றாட தகவல் தொடர்பு வசதிகளுக்கு ஏராளமாக, கோடிக்கணக்கிலும் செலவழிக்க வேண்டியுள்ளது. அப்படியே செலவழித்தாலும், வசதிகள் அவ்வளவு நிறைவாக இருப்பதில்லை என்பதோடு நிர்வாக செலவும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இத்தகைய செலவுகளை பெருமளவுக்கு குறைப்பதற்கான ஒரு அரிய வழிதான் Google Apps. நிறுவனத் தேவைகளையும் தாண்டிய வசதிகளை இலவசமாகவும், மிகக்குறைந்த செலவிலும் அளிக்கப்படும் இச்சேவையைப் பற்றியதான அறிமுகம் தான் இந்தக் கட்டுரை. பொதுவான நிறுவனத் தேவைகள் என்னென்ன?
• மின்னஞ்சல் (email)• அரட்டை (chat)
• தொலைபேசி (Phone)
• கோப்புகள் பரிமாற்றம்/பகிர்வு (Document transfer and sharing)
• நாட்காட்டி (Calendar)
• அக இணையதளம் (Internal website )
• திட்டப்பணி இணையதளம் (Project website)
மேற்குறிப்பிட்டவற்றைத் தாண்டிய தகவல் தொடர்புத் தேவைகள் வேறெதுவும் நிறுவனங்களுக்கு இருக்கிறதா என்ன?
Google-நிறுவனம் இச்சேவையை மூன்று பதிப்புகளில் வழங்குகிறது.
• Standard Edition
• Premier Edition
• Education Edition

மேலும் அந்த இணையதளம் தொடர்பான மாற்றங்களை செய்ய நமக்கு அனுமதியும், வழிமுறையும் இருக்க வேண்டும். உதாரணமாக மின்னஞ்சல் தொடர்பான குறியீட்டை (Entry) மாற்றுவதற்கு நம்முடைய பதிவாளர் (Domain registrar ) அனுமதித்திருக்க வேண்டும். (பெரும்பாலான பதிவாளர்கள் அனுமதிப்பதினால் இது ஒரு பிரச்சனையாக இருக்காது)
தரவரையறை பதிப்பு ( Standard Edition ) பற்றி மட்டும் இங்கு விளக்கவுள்ளோம். மேலும் விவரங்களுக்கு Insert link பார்க்கவும்.
நிறுவனம் பற்றிய அறிமுக தகவல்களை அளித்த பின் நிர்வாக பயனாளர் (Administrative user )கணக்கை ஒன்றை உருவாக்க வேண்டும். இந்தக் கணக்கை கொண்டு தான் , இனிவரும் அனைத்துச் செயல்களையும் செய்ய முடியும். பொதுவாக இதனை admin@domainname.com என்று உருவாக்குவது தான் மரபு.
-தொடரும்
No comments:
Post a Comment